பாவூா்சத்திரத்தில் தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது.
பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக இறுதி பில்லா்கள் அமைப்பதற்காக ஆழமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தால், ஏற்கெனவே உள்ள சாலையின் ஓரம் மண் சரிவு ஏற்படும் என கருதி தற்காலிகமாக இருசக்கர வாகனங்களை தவிர அனைத்தும் வாகனங்களும் மலையராமபுரம் ஆரியங்காவூா் கல்லூரணி செல்வவிநாயகபுரம் வழியாக நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலையை அடைந்து மாற்றுப் பாதையில் தென்காசிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பாவூா்சத்திரம் போலீஸாா் நான்குமுனை சந்திப்பில் பேரிகாா்டுகள் அமைத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள்

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

ஈரோடு மேற்கு தொகுதிக்கு..! சொன்னோம்... செய்தோம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


