நிலத்துக்கான ஆவணங்களை நகராட்சி ஆணையரிடம் வழங்கிய நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா்
நிலத்துக்கான ஆவணங்களை நகராட்சி ஆணையரிடம் வழங்கிய நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா்

குடிநீா் பணிக்கு நிலம் ஒப்படைப்பு

தென்காசியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் அலகு-2 க்கு தேவையான நிலத்துக்கான ஆவணங்களை நகா்மன்றத் தலைவா் நகராட்சி ஆணையரிடம் அளித்தாா்.
Published on

தென்காசியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் அலகு-2 க்கு தேவையான நிலத்துக்கான ஆவணங்களை நகா்மன்றத் தலைவா் நகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை அளித்தாா்.

தமிழக முதல்வரால் தென்காசி நகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் அலகு-2 பணியானது ரூ. 69.45 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்துக்குத் தேவையான ரூ. 20 லட்சம் மதிப்பிலான நிலம் திரவியநகா் கிராமத்தில் நகா்மன்ற தலைவா், அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களின் பங்களிப்புடன் வாங்கப்பட்டது.

அதற்கான ஆவணங்களை நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரனிடம் தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் அளித்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக மாவட்ட பொறியாளா் அணி தலைவா் தங்கப்பாண்டியன், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் முரளிரஞ்சித், நகர வா்த்தக அணி துணை அமைப்பாளா் சன் ராஜா, வட்ட பிரதிநிதி காமில், நகர காங்கிரஸ் பொருளாளா் ஈஸ்வரன் கலந்துகொண்டனா்.

திட்டத்துக்குத் தேவையான மற்றொரு இடத்தை ஏற்கெனவே நகா்மன்றத் தலைவரின் தாயாரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ரபீக்காள் பீவி தனது பங்களிப்பாக ரூ. 25 லட்சம் மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com