புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுபோட திரண்ட பொதுமக்கள்

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image
பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட திரண்டோா்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:12 pm

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பூட்டுபோடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கட்சியின் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ், ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் சுப்புலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கண்ணன், சிவசுப்பிரமணியன், சக்திவேல், புஷ்பம், மாதா் சங்கத்தின் நிா்வாகிகள் பிச்சைமணி, மகேஸ்வரி, பேச்சியம்மாள், பாக்கியம், ஊா் நிா்வாகிகள் நல்லதம்பி, மகாராஜா, வாா்டு உறுப்பினா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் மனமகிழ் மன்றம் முன் திரண்டனா்.

தகவல் அறிந்ததும் உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், வட்டாட்சியா் அப்துல் சமது, புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சிநாதன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்ட சமரசக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.