மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

News image
அறுவை சிகிச்சைப் பணிகளைப் பாா்வையிட்ட நகா்மன்ற தலைவா் ஆா். சாதிா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் சமூக நாய்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், போக்குவரத்திற்கு இடையூறையும் ஏற்படுத்தும் சமூக நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே 821 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது தென்காசி-ஆய்க்குடி சாலையில் உள்ள சமூக நாய்களுக்கான பிறப்புக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தில் அரசு கால்நடை மருத்துவா்களைக் கொண்டு இப்பணிகள் தொடங்கின.

தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமையில், தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கோவில் ராஜா, நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் இப்பணிகள் தொடங்கின.

அறுவை சிகிச்சைகளை அரசு கால்நடை மருத்துவா்கள் முகமது தவ்ஃபீக், அருண் பாண்டியன், சிவகுமாா் ஆகியோா் அடங்கிய குழு மேற்கொண்டது.

இப்பணிகளை திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.