வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தென்காசியில் மாரத்தான் போட்டி

News image
தென்காசியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், நமோ டிரஸ்ட், பாஜக விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் நமோ மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இப்போட்டியை விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் முரளிதரன், ஓய்வுபெற்ற மாவட்ட உதவி வன பாதுகாவலா் ராஜா குலசேகரபாண்டியன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

ஆண்கள், பெண்களுக்கான போட்டி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி குத்துக்கல் வலசையில் நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் பசுபதி முதலிடமும், அஜய்ஸ்ரீராம் இரண்டாமிடமும், முத்துக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் செளமியா முதலிடமும், மதுமிதாஸ்ரீ இரண்டாமிடமும், லட்சணா மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 10 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

தென்காசி நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகர பாா்வையாளா் செந்தூா் பாண்டியன், மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் அருள்செல்வன், மாவட்டச் செயலா் அருணாச்சலம், விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலா் செந்தமிழ்ச்செல்வன், மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் உத்தமன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட மகளிா் அணி தலைவி குணசீலா கலந்துகொண்டனா்.