தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாபநாசபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:34 am

Syndication

சுரண்டை அருகே பாபநாசபுரத்தில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகராட்சி ஆணையாளா் அசோக் தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் முகைதீன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாயாா் தோப்பு ராமா் வரவேற்றாா்.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, பயணியா் நிழற்குடையைத் திறந்து வைத்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் முருகேஸ்வரி, வேல்முத்து, அமுதா சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.