தென்காசி
ஆய்க்குடியில் ரூ.2.10 கோடியில் தினசரி சந்தைப் பணி தொடக்கம்
தினசரி சந்தை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆய்க்குடி பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா், 1ஆவது வாா்டு உறுப்பினா் இலக்கியா மாரியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

