குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
Published on

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக, குற்றாலம் பேரருவியில் நள்ளிரவு முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாலம் வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.

அதே போன்று ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிப்பதற்கும், செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com