சங்கரன்கோவிலில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திங்கள் இரவுமுதல் செவ்வாய்க்கிழமை காலைவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை (ஜன. 5) இரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) காலை 6 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலியிலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், கம்பம், தேனி, குமுளி செல்லும் வாகனங்கள் சங்கரன்கோவில் பயணியா் மாளிகையிலிருந்து இடதுபுறமாக சென்று புளியங்குடி சாலை, ரயில்வே கேட், வடக்குப் புதுாா், வேல்ஸ் பள்ளி சாலை, அச்சம்பட்டி வழியாக ராஜபாளையம் சாலையில் செல்ல வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துாா், ராஜபாளையத்திலிருந்து வரும் வாகனங்கள் முறம்பு, பருவக்குடி முக்கு சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி கலிங்கப்பட்டி, திருவேங்கடம், அழகாபுரி, கரிசல்குளம், பெருங்கோட்டூா், களப்பாகுளம் வழியாக சங்கரன்கோவில் வந்துசெல்ல வேண்டும். இத்தகவல் சங்கரன்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
