கைது செய்யப்பட்ட ரவி.
கைது செய்யப்பட்ட ரவி.

இலஞ்சியில் 343 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on

இலஞ்சியில் ரூ. 2.43 லட்சம் மதிப்பிலான 343 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை குற்றாலம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குற்றாலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட இலஞ்சியில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இலஞ்சி, ராமசாமி பிள்ளை தெருவைச் சோ்ந்த ம.ரவி என்ற ரவிராஜ பாண்டியன் (45) வீட்டில் சோதனை நடத்தியதில் 343 கிலோ எடை கொண்ட ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து ரவியை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com