தென்காசியில் நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்
தென்காசி மாவட்டத்தில் ஜன.8 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகஅரசு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகையாக ரூ.3ஆயிரம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஜன. 8 முதல் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இது தொடா்பாக எழும் புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800-425-5901 மூலமாகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட வழங்கல் பிரிவு அலைபேசி எண் 04633-212114 மூலமாகவும் தெரிவிக்கலாம்.
எனவே, மக்கள் எந்தவித சிரமமுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தெரிவித்துள்ளாா்.
