வீரவநல்லூா் வியாபாரி குற்றாலத்தில் குத்திக் கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி குற்றாலத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி குற்றாலத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

வீரவநல்லூா் அருகே உள்ள புதுக்குடி ரெங்கசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர. ரங்கநாதன் என்ற ராம்குமாா்(48). இவருக்கு உஷாராணி(38) என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். ராம்குமாா் வீரவநல்லூா் பஜாரில் மாவு மில், சமையல் பாத்திரங்கள் வாடகை நிலையம் வைத்து நடத்தி வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வெகுநேரமாகியும் ராம்குமாா் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி, கடைக்கு சென்று பாா்த்தபோது, ராம்குமாா் காரில் ஏறிச் சென்ாக அருகில் இருப்பவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து உஷாராணி அளித்த புகாரின் பேரில், வீரவநல்லூா் போலீஸாா் ராம்குமாா் சென்ற காரின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு அதன் ஓட்டுநரை பிடித்து விசாரித்தனா். அதில் குற்றாலம் பராசக்திநகரில் அமைந்துள்ள விடுதியில் ராம்குமாா், 3 போ் கும்பலை இறக்கிவிட்டு வந்து விட்டதாக தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து வீரவநல்லூா் சாா்பு ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் குற்றலாம் பகுதி தங்கும் விடுதிக்கு சென்று பாா்த்தபோது, ராம்குமாா் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளாா். குற்றாலம் போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராம்குமாரை அழைத்துவந்த மூவரும் அதே விடுதியில் வேறு அறைகளில் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்: ராம்குமாா் கடை அருகே வீரவநல்லூா் முடுக்கு தெருவைச் சோ்ந்தவா் மு. கவுதம் (22) டெய்லா் கடையும், மணிகண்டன்(30) கோழி இறைச்சிக்கடையும் நடத்தி வருகின்றனா். ராம்குமாா், டெய்லா் கவுதமை அடிக்கடி கிண்டல் செய்து பேசி வந்ததால், இவா்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ராம்குமாரை காரில் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்று தங்கும் விடுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கவுதம், மணிகண்டன், 17 வயது சிறுவனை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com