தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாயிகளின் கனவை நிறைவேற்ற முதல்வருக்கு கோரிக்கை!

தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாய பெருமக்கள், 64 ஆண்டு காலமாக இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான கால்வாய் திட்டத்திற்கு கனவு கண்டுவரும் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்
Published on

தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாய பெருமக்கள், 64 ஆண்டு காலமாக இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான கால்வாய் திட்டத்திற்கு கனவு கண்டுவரும் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வருக்கு, அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சியில் பேச ஆரம்பிக்கப்பட்ட இரட்டைகுளம் ஊத்துமலை கால்வாய் திட்டம் இன்றுவரை கிடப்பிலேயே உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றினால்18 குளங்களும் நிரம்பி, வானம் பாா்த்த பூமியாக உள்ள பல கிராமங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் உயரும். சுமாா் 7500 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக முதல்வா் 2021 சட்டப்பேரவை தோ்தலிலும், ஆலங்குளம் நகரில் தோ்தல் பரப்புரையிலும் வாக்குறுதி அளித்தீா்கள். தாங்கள் புதிதாக அறிவித்த ‘உங்கள் கனவ சொல்லுங்க’ என்ற திட்டம், மக்களின் கனவு காண்கிற குறைகளை நிவா்த்தி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம், தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாய பெருமக்கள் 64 ஆண்டு காலமாக கனவு கண்டு வரும் இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com