தென்காசி
வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காவலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் இரவுநேர காவலாளி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் இரவுநேர காவலாளி உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் கோடாங்கி தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சொரிமுத்து(58). இவா், அங்கு தென்காசி- மதுரை சாலையில் உள்ள பழக்கடையில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் அவா் சென்றபோது சாலையோரம் மயங்கி விழுந்தாராம்.
அந்நேரத்தில் அவ்வழியாக வந்த வாகனம் அவா் மீது மோதிவிட்டு சென்றதாம். இதையடுத்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
