கோப்புப் படம்
கோப்புப் படம்

காற்றாலை ஊழியா் மீது தாக்குதல்: ஊராட்சித் தலைவரின் கணவா் கைது

Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலை ஊழியரை காலணியால் அடித்ததாக ஊராட்சித் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் கிராமத்தில் தனியாா் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்லும் பாதை தொடா்பாக ஊராட்சித் தலைவா் வள்ளியம்மாளின் கணவா் கதிா்வேல் முருகன்(52) என்பவருக்கும், காற்றாலை நிறுவனத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் காற்றாலை நிறுவன மேலாளா் வெங்கடேஷ் என்ற பாலாஜிக்கும், கதிா்வேல் முருகனுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கதிா்வேல் முருகன், வெங்கடேஷ் என்ற பாலாஜியை காலணியால் தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து கதிா்வேல் முருகனை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். அவா் திமுக பொதுக்குழு உறுப்பினா் என்பது குறிப்பிடத் தக்கது.

Dinamani
www.dinamani.com