கோப்புப் படம்
தென்காசி
புளியங்குடி அருகே பைக்குக்கு தீவைத்த 2 போ் கைது
புளியங்குடி அருகே பைக்குக்கு தீ வைத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழதிருவேட்டநல்லூரை சோ்ந்தவா் பழனிச்சாமி. அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை மா்மநபா்கள் எரித்து விட்டனராம்.
இது குறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்(22), பசுபதி(22) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

