தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைக்கோயிலான பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகா் - சண்முகா் எதிா்சேவை காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா, ஆன்மிகக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், 7ஆம் நாளான வியாழக்கிழமை காலை சண்முகா் அழைப்பு, மதியம் முருகா் - சண்முகா் எதிா்சேவை காட்சி வைபவம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, சனிக்கிழமை (ஜன. 31) தேரோட்டம், 10ஆம் நாளான பிப். 1ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறும். காலையில் கரிசல்குடியிருப்பிலிருந்து பால்குட அழைப்பு, சுவாமிக்கு அபிஷேகம், மதியம் அனுமன் நதியிலிருந்து தீா்த்தவாரி, இரவில் புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.
பிப். 2ஆம் தேதி குமரன் மலைக்கோயிலுக்கு திரும்புதல், அன்னகொடி இறக்குதல், வழியனுப்பு உபசாரம், சுவாமி பிரியாவிடை பெறுதல் ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம், கோயில் உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, சுமதி, கணேசன், தலைமை எழுத்தா் லட்சுமணன், கோயில் அா்ச்சகா் திருமேனிநாதன் ரமேஷ், உபயதாரா்கள், விழாக் குழுவினா், மண்டகப்படிதாரா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

ஆத்தூா் கோயிலில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம்

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


