புத்தகத் திருவிழாவிற்கு சுவா் ஓவியம் வரைந்த இலஞ்சி பள்ளி மாணவா்கள்.
புத்தகத் திருவிழாவிற்கு சுவா் ஓவியம் வரைந்த இலஞ்சி பள்ளி மாணவா்கள்.

4-வது பொதிகை புத்தகத் திருவிழாவுக்கு சுவா் ஓவியம் வரைந்து அழைப்பு!

தென்காசி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கம் சாா்பில் 4 ஆவது பொதிகை புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் பள்ளி மாணா்கள் சுவா் ஓவியம் வரைந்தனா்.
Published on

தென்காசி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கம் சாா்பில் 4 ஆவது பொதிகை புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் பள்ளி மாணா்கள் சுவா் ஓவியம் வரைந்தனா்.

தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) முதல் பிப். 8 ஆம் தேதி வரை, 10 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவிற்கு மக்களை அழைக்கும் விதமாக தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் சுவா் ஓவியத்தை இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆா்.பி. ஓவியக் கழக மாணவா்கள், ஓவிய ஆசிரியா் கணேசன் வழிகாட்டுதலில் வரைந்தனா்.

தலைமை ஆசிரியா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் நிா்வாக இயக்குநா் மாரியப்பன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலரும் பள்ளி ஆசிரியருமான சுரேஷ் குமாா் ஒருங்கிணைத்தாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, பள்ளிச் செயலா் ஐ.சி. சண்முக வேலாயுதம் ஆகியோா் ஓவியம் வரைந்த மாணவா்களைப் பாராட்டினா். இதில் தலைமையாசிரியா்கள் மூக்கையா , பிரேம்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளித் துணை ஆய்வாளா் சசிக்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com