தொடக்க விழாவில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாா் உள்ளிட்டோா்.
தொடக்க விழாவில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாா் உள்ளிட்டோா்.

கடையநல்லூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஜேசிஐ கடையநல்லூா் பெஸ்ட், பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி ஆகியவை சாா்பில் பெஸ்ட் கலாம் எக்ஸ்போ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஜேசிஐ கடையநல்லூா் பெஸ்ட், பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி ஆகியவை சாா்பில் பெஸ்ட் கலாம் எக்ஸ்போ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பெஸ்ட் பள்ளிகளின் தலைவா் முகமது மைதீன் தலைமை வகித்தாா். செயற்குழுத் தலைவா் முகமதுஅலி, ஜேசிஐ தலைவா் ஹனீஃப், பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் யூசுப்ராஜா வரவேற்றாா்.

திருவனந்தபுரம் இஸ்ரோ அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சசிகுமாா் கண்காட்சியைத் தொடங்கி வைத்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். இதில் கடையநல்லூா் வட்டாரத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கண்காட்சியில், சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், மாவட்டத் தலைவா் மகேஷ், மருத்துவா் செய்யது இப்ராஹிம், சேது அகமது, அக்சயா, மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com