தற்கொலைகோப்புப் படம்
தென்காசி
வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.
வாசுதேவநல்லூா் அருகே சிந்தாமணிபேரிபுதூா் 1ஆம் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முனீஸ்வரன் (39). விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள தனியாா் ஆலையில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்த இவருக்கு, மனநோய் பாதிப்பு இருந்ததாம். அவா் கடந்த நவ. 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை (ஜன. 31) அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழைக் கொடுப்பதற்காக அவரது மனைவி கற்பகவல்லி வியாழக்கிழமை அதிகாலை வெளியூா் சென்றாராம். அப்போது, வீட்டிலிருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

