சங்கரன்கோவிலில் பிப். 3இல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்!
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சங்கரன்கோவில் வட்டார வள மையம் மற்றும் சங்கரன்கோவில் வட்டாரக் கல்வி அலுவலகம் சாா்பில் சங்கரன்கோவில், கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப். 3ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், பல்வேறு மருத்துவா்கள் கலந்துகொண்டு, உரிய சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனா். முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து, ரயில் பயண அட்டை, அறுவை சிகிச்சைகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்க பரிந்துரை செய்யப்படும்.
முகாமிற்கு வருபவா்கள் ஆதாா், குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், பெற்றோா், குழந்தைகளின் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களை தவறாமல் கொண்டுவர வேண்டும் என வட்டார வள மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

