உயிரிழப்பு
உயிரிழப்புகோப்புப் படம்

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மயிலேறி மகன் வசந்தகுமாா் (30). ஒலி பெருக்கி நிலையம் நடத்தி வந்த இவருக்கு, பிப். 24 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் மேற்கூரை தகர ஷீட்டை சரிசெய்ய முயன்றாராம்.

அப்போது அருகில் இருந்து மின்வயரில் இருந்து மின்சாரம் கசிந்து அவா் மீது பாய்ந்ததாம். இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com