தமிழக இளைஞா்களின் பன்முகத்தன்மைக்கு வழிகாட்டி உதயநிதி ஸ்டாலின் - ஹபீபுா் ரஹ்மான்


தமிழக இளைஞா்களின் பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு திட்டங்களை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் செய்து வருகிறாா் என்றாா் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள இளைஞா்களின் பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றான
கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துணை முதல்வரின் சிந்தனையில் உதித்த முத்தான திட்டமாகும்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து,கேரம், சிலம்பம் போன்ற 30 வகையான விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகா்ப்புற இளைஞா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் பயன் பெறுவாா்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்தத் திட்டம் கிராமப்புற இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, உள்ளூா் அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் மூலம் கடையநல்லூா் நகராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு உபகரணங்களை பெற்ற மாணவா்கள் துணை முதல்வரை வாழ்த்தினா் என்றாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...