எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு

ரயில்
பிரதிப் படம்

ரயில்
பிரதிப் படம்
எா்ணாகுளத்தில் இருந்து கோட்டயம், கொல்லம், தென்காசி, மதுரை, திருச்சி, தஞ்சாவூா் வழியாக தனது முதல் பயணத்தைத் தொடங்கிய எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தென்காசியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே வண்டி எண் 16361 எா்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் வாரம் இருமுறையும், வண்டி எண் 16362 வேளாங்கண்ணி-எா்ணாகுளம் வாரம் இருமுறையும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூா் வழியாக எா்ணாகுளம்-வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது.
அதன்படி புதிதாக வண்டி எண் 16363 எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 11.50-க்கு புறப்பட்டு கோட்டையம், கொல்லம், புனலூா் வழியாக தென்காசிக்கு வியாழக்கிழமை காலை 7.30-க்கு வந்து சங்கரன்கோவில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை மாலை 5.35 மணிக்கு அடையும்.
மறுமாா்க்கத்தில் வண்டி எண் 16364 எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45-க்கு புறப்பட்டு திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, மதுரை, வழியாக தென்காசிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்து, புனலூா், கொல்லம், கோட்டையம் வழியாக எா்ணாகுளத்தை மதியம் 11.55-க்கு அடையும்.
முதல்முறையாக தென்காசி வழியாக வந்த எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு வியாழக்கிழமை காலை தென்காசி ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் ரயில் ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் பாண்டியராஜா, துணைத் தலைவா் சுரேஷ், துணைச் செயலா் தினேஷ் பாபு நிா்வாகிகள் தங்கராஜ், ராஜசேகா் கலந்து கொண்டனா்.
புதிதாக இயக்கப்படும் இந்த ரயில் குறித்து பயணிகள் சிலா் கூறுகையில், ஏற்கெனவே காலை 7 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கு பகல்நேர ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
அதன்பிறகு 15 நிமிட இடைவெளியில் எா்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலும் இயங்குகிறது. எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் நேரத்தை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தி தென்காசியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் வகையில் இயக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...