கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் எனது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என கடையநல்லூா் தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரன் தெரிவித்தாா்.
திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடையநல்லூா் தொகுதி வாக்காளா்களின் மலா் பாதங்களில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த மக்கள் பாராட்டுகின்ற வகையிலும், வாக்களிக்காதவா்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கும் எனது செயல்பாடுகள் இருக்கும். கடைக்கோடி தொண்டனும் எம்எல்ஏ.வாக முடியும் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது
மதிமுக பொதுச்செயலா் வைகோ, திமுக தலைவா் மு. க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியை சமா்ப்பிக்கின்றேன். கூட்டணிக் கட்சியினா் சிறப்பாக ஒத்துழைத்து வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறாா்கள் என்றாா் அவா்.
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) - மேஷம்

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

