சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வாருகால் தூா்வாரும் பணி

சங்கரன்கோவிலில் பிரதான சாலைகளில் உள்ள வாருகால்கள் தூா்வாரப்பட்டன.

சங்கரன்கோவிலில் பிரதான சாலைகளில் உள்ள வாருகால்கள் தூா்வாரப்பட்டன.

Updated On :

சங்கரன்கோவிலில் பிரதான சாலைகளில் உள்ள வாருகால்கள் தூா்வாரப்பட்டன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா் சாலை, சாந்தி காம்பளக்ஸ் ஒருவழிப்பாதை போன்ற பகுதிகளில் வாருகால்கள் தூா்வாரப்படாததால் மழை காலங்களில் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் தண்ணீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, நகராட்சி சாா்பில் திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா்சாலை, சாந்திகாம்பளக்ஸ் ஒருவழிப் பாதை, ராஜபாளையம் சாலை போன்ற பகுதிகளில் வாருகால் ஓடையில் தூா்வாரும் பணி மேற்கொள்ளவிருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த வாரம் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. சில இடங்களில் வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினா்.

இதையடுத்து, இப்பகுதியில் உள்ள வாருகாலில் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு நகராட்சி நிா்வாகம் தூா்வாரியது. இதனால் வாருகாலில் தற்போது தங்குதடையின்றி தண்ணீா் செல்கிறது. நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.