நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் கூட்ட நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகம் இருந்தது.

பேரருவியில் நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பேரருவியைத் தவிா்த்த ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.