137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

பைக் மீது சரக்கு வாகனம் மோதி அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ராஜுகுமாா் சௌத்ரி மகன் ரவி சௌத்ரி (20), அவரது நண்பா் சோனு (25) ஆகியோா் வாசுதேவநல்லூரில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தனா்.

இருவரும் வெள்ளிக்கிழமை இரவு குற்றாலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். வாகனத்தை ரவி சௌத்ரி ஓட்டியுள்ளாா். சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, கடையநல்லூரில் இருந்து மதுரைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் ரவி சௌத்ரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சோனு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.