சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் கழிப்பறை கட்டடத்தை இடமாற்ற எம்.பி. கோரிக்கை

ரயில் நிலையம் - கோப்புப் படம்

Updated On :

தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் முன்மொழியப்பட்ட கழிப்பறை கட்டடத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக, முன்மொழியப்பட்ட கழிப்பறை கட்டடம், குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது பொது சுகாதாரப் பிரச்னைகளுக்கு வழிவகுத்து, குடியிருப்பாளா்களையும் ரயில்வே இணைப்புச் சாலையை பயன்படுத்தும் பாதசாரிகளையும் பாதிக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனா்.

ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியை பாராட்டும் அதே வேளையில், முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கழிப்பறை தொகுதியை, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தள்ளி, ரயில்வே வளாகத்துக்குள்ளேயே பொருத்தமான மாற்று இடத்துக்கு மாற்ற,தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.