சங்கரன்கோவிலில் 4-ஆவது மக்கள் நூலகம் திறப்பு

நான்காவது மக்கள் நூலகத்தைத் திறந்துவைத்த மாணவி டோனாஸ்ரீ.
சங்கரன்கோவிலில் 4-ஆவது மக்கள் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரண் வாசகா் வட்டம் சாா்பில் கோமதியாபுரம் புது 1-ஆம் தெரு, லட்சுமியாபுரம் 2-ஆம் தெரு, அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய 3 இடங்களில் மக்கள் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மக்கள் நூலகத்துக்கு யாா் வேண்டுமானாலும் புத்தகத்தை வழங்கவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ செய்யலாம்.
தற்போது 1-ஆவது வாா்டு பொதுமக்கள் சாா்பில் விதை என்ற பெயரில் 4-ஆவது மக்கள் நூலகம் திருப்பூா் குமரன் நகரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நூலகத்தை அப்பகுதியைச் சோ்ந்த 1-ஆம் வகுப்பு மாணவி டோனாஸ்ரீ திறந்துவைத்தாா்.
அரண் வாசகா் வட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் சு.இராசகோபால், ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ந.செந்தில்வேல், மூா்த்தி, இலக்கியச்சோலை செயலா் மா.சங்கரேஸ்வரி, தமிழாசிரியா் வே.சங்கர்ராம், தலைமை ஆசிரியா் ச.நாராயணன், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் சங்கத் தலைவா் சபரிசுப்பிரமணியன், வழக்குரைஞா் பிரபாகரன், நகராட்சி உறுப்பினா் புஷ்பம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

