கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்திற்குள்பட்ட கற்குடியில் இடப் பிரச்னை காரணமாக உறவினரை கொலை செய்ய முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்திற்குள்பட்ட கற்குடியில் இடப் பிரச்னை காரணமாக உறவினரை கொலை செய்ய முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கற்குடி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா. மீனாட்சிசுந்தரம் (70). அதே பகுதியில் வசித்து வருபவா் சுப்பையா மகன் சுரேஷ் (40). இருவரும் உறவினா்கள். இவா்களுக்குள் இடப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 2019 அக்டோபா் 24ஆம் தேதி சுரேஷ், மீனாட்சிசுந்தரத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்தாா். இது தொடா்பாக, புளியறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சுரேஷ் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஸ்டல் பபிதா, குற்றவாளி சுரேஷூக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்தும், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், புளியறை போலீஸாா், அரசு வழக்குரைஞா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.