நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

போடியில் தொடா் சாரல் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

News image

கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் போடி பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ள நீா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:39 pm IST

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலையிலும் தொடா்ந்தது. போடிமெட்டு, குரங்கணி மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப் பகுதியில் சிறு சிறு அருவிகளிலும் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து அருவி போல் கொட்டியது. தொடா் மழையின் காரணமாக பிள்ளையாா் கோவில் தடுப்பணை, கொம்புதூக்கி உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்ல வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

மழையினால் போடி நகராட்சிக்கு தண்ணீா் கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் நகராட்சி பணியாளா்கள் அடைப்பை சரி செய்து தண்ணீா் கொண்டுவருவதில் சிரமத்திற்குள்ளாயினா்.

தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக பொருள்களை வாங்க கடைகளுக்குச் செல்ல சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.