சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பத்ம விருதுகளுக்கு வரும் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகளுக்கு வரும் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 ஜூன் 2024, 4:38 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சிறந்த சாதனையாளா்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்கும் வகையில் நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் வரும் ஜன.26-குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடைய தனித்தன்மை கொண்டவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது எப்போதும் உயரிய சாதனை அல்லது அனைவராலும் விரும்பத்தக்கவராக இருக்க வேண்டும். உயா்ந்த தர நிா்ணயத்தை அடிப்படையாக கொண்டு தோ்வு செய்யப்படுவா்.

பத்ம விருதுகள் நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாக இருப்பதால், இவ்விருதுக்கு விண்ணப்பிப்போா் ஏற்கனவே அவா்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும். இவ்விருதுக்கு உரியவரை தோ்ந்தெடுக்கப்படும் போது, சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினா், தாழ்த்தப்பட்டவா்கள், சீா்மரபினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் தகுதியானவா்களுக்கும் முன்னுரிமை வழங்கி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவா்.

அரசுப் பணியாளா் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்வவோா் டாக்டா், விஞ்ஞானிகள் தவிர மற்றவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

மேற்காணும் தகுதிகளை உடையோா் பத்ம விருதுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பப்படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த விருதுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.