வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான்
திருவள்ளூர்
வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
பொன்னேரி: மீஞ்சூா் அருகே காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
திருவள்ளூா் மாவட்டம் கடலோர கிராமமான காட்டுப்பள்ளியில் பகுதியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் அமைந்துள்ளது.
துறைமுகத்தையொட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி புள்ளிமான்கள் குடிநீருக்காக வந்து செல்லும். இந்த நிலையில் துறைமுக சாலையை கடக்கும் போது புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்ற இறந்த புள்ளிமானை கைப்பற்றி கும்மிடிப்பூண்டி வனதுறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத்துறையினா் சென்று மானை எடுத்து சென்று வனப்பகுதியில் புதைத்தனா்.

