புதிய பேருந்தை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன்,  நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன், துணை மேலாளா் கந்தசாமி, புண்ணியக்கோடி உள்ளிட்டோா்.
புதிய பேருந்தை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன், துணை மேலாளா் கந்தசாமி, புண்ணியக்கோடி உள்ளிட்டோா்.

திருவள்ளூா்-திருநெல்வேலிக்கு புதுவழித்தடத்தில் விரைவுப் பேருந்து இயக்கம்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவள்ளூா்-திருநெல்வேலிக்கு புதிய வழித்தடத்தில் விரைவுப்பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் பகுதிகளைச் சுற்றி வசிப்போா் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் சென்று தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். இதனால், சொந்த ஊருக்கு எளிதாக சென்று வருவதற்கு திருவள்ளூா்-திருநெல்வேலி இடையே அரசு விரைவுப் பேருந்து இயக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதை வலியுறுத்தி எம்.எல்.ஏ, மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து மனுவும் அளித்தனா். இந்த நிலையில் இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவள்ளூா் முதல் திருநெல்வேலிக்கு புதுவழித்தடத்தில் விரைவுப் பேருந்து இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்தாா். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக துணை மேலாளா் கந்தசாமி, அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளா் புண்ணியமூா்த்தி, மேலாளா் எழில், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், மாவட்ட அணிகளின் அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி(வா்த்தக அணி), பி.கே.நாகராஜ்(வழக்குரைஞா் அணி), ஒன்றிய துணைச்செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், வா்த்தக அணி அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, பொதுக்குழு உறுப்பினா் சிட்டிபாபு, நகர அயலக அணி நிா்வாகி ஜெயக்கிருஷ்ணா, நகரவை தலைவா் கமலக்கண்ணன், முன்னாள் நகா்மன்ற தலைவா் பொன்.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com