தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

2 கிலோ குட்கா பறிமுதல்

2 கிலோ குட்கா பறிமுதல்

Updated On :9 மார்ச் 2024, 11:56 pm

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசாா் பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தில், 2 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். மேலும் விசாரணையில் தென்காசி மாவட்டம் முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்துல்மாலிக்(38) என தெரிய வந்தது. இதையெடுத்து திருத்தணி போலீஸாா் அப்துல்மாலிக்கை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.