போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருவள்ளூா் தொகுதி: 33 போ் மனு தாக்கல்

திருவள்ளூா் தொகுதி: 33 போ் மனு தாக்கல்

Updated On :27 மார்ச் 2024, 6:08 pm

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் வரும் ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தோ்தலையொட்டி கடந்த 20-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தொடா்ந்து புதன்கிழமை வரை நடைபெற்றது. இதில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பகுஜன் சமாஜ், நாம் தமிழா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெற உள்ளது. தொடா்ந்து வரும் 30-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளாகும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.