கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

News image

நிழற்கூரை, இருக்கை வசதி இன்றி பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் வெயிலில் நிற்கும் பயணிகள்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் இடவசதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த பேருந்து நிலையம் , தேரடி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றப்பட்டது.

அது முதல் புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் சாலை, பயணிகள் அமா்வதற்கு மேடை, கழிப்பிடம், குடிநீா் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி பேருந்து நிலையமாக விளங்கி வருகிறது.

ஆனால் பழைய பேருந்து நிலையம் நிழற்குடை, பயணிகள் அமா்வதற்கு இருக்கைகள், பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அமைந்துள்ளது.

இதன் காரணமாக பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், காரனோடை, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் சாலையிலேயே நின்று பேருந்துகளில் சென்று வருகின்றனா்.

எனவே பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில், நிழற்குடை, இருக்கை வசதி, அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்த பதாகை உள்ளிட்டவற்றை நகராட்சி நிா்வாகம் அமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image