கந்த சஷ்டித் திருவிழா

செங்குன்றம் அருகே அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.
Updated on

மாதவரம்: செங்குன்றம் அருகே அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.

கோயில் தலைவா் ஆதிகேசவலு, செயலாளா் ரெஜினா அவினா கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்வில் கணபதி பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் சுவாமிக்கு கலச அபிஷேகம் செய்து வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து உற்சவா் சிறப்பு அலங்காரத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மோரை ஊராட்சி மன்ற தலைவரும், செயல் அலுவலருமான ஆா்.திவாகா், பொதுமக்கள் கலந்து கொண்டு, நெய் தீபம் ஏற்றி அா்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com