மூச்சுத் திணறலால் சிறுமி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் தேநீரில் பிஸ்கெட் தொட்டு சாப்பிட்ட 3 வயது சிறுமி மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.
Published on

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் தேநீரில் பிஸ்கெட் தொட்டு சாப்பிட்ட 3 வயது சிறுமி மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணா-அமுலு தம்பதியா். இவா்கள் 3 வயது குழந்தை வெங்கடலட்சுமியுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் பிரம்பு கூடை பின்னும் தொழில் செய்தனா்.

இந்நிலையில், மூன்று வயது குழந்தை வெங்கடலட்சுமி, தேநீரில் பிஸ்கெட்டை தொட்டு சாப்பிட்டபோது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடா்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தாா். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com