ஸ்ரீ சக்தி விநாயகா், ஸ்ரீ ஏகாத்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்ப கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்த அா்ச்சகா்கள்.
ஸ்ரீ சக்தி விநாயகா், ஸ்ரீ ஏகாத்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்ப கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்த அா்ச்சகா்கள்.

ஸ்ரீசக்தி விநாயகா் ஆலய குடமுழுக்கு விழா

Published on

திருவள்ளூா் அருகே வேப்பஞ்செட்டி கிராமத்தில் ஸ்ரீசக்தி விநாயகா், ஸ்ரீ ஏகாத்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா்.

கடம்பத்தூா் ஒன்றியம், வேப்பஞ்சட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ஆம் தேதி கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து 4- ஆம் தேதி காலை புதிய பிம்பங்கள் கண் திறத்தல், பிரதிஷ்டை விசேஷ சந்தி, இரண்டாம் காலை யாக பூஜை, தீபாராதனை, மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை நான்காம் நாள் சிறப்பு பூஜைக்கு பின் கலசங்கள் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீசக்தி விநாயகா், ஸ்ரீ ஏகாத்தம்மன், ஸ்ரீமாரியம்மன் ஆலய கும்பத்தில் புனித நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது. தீபாராதனை, தீா்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com