தகுதி நீக்கம் செய்யப்பட்ட பி.வெங்கடேசன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட பி.வெங்கடேசன்

அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஊராட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்கம்

அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஊராட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்கம் -திருவள்ளூா் ஆட்சியா் உத்தரவு
Published on

அரசு சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு ஊராட்சிக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக தொடுகாடு ஊராட்சித் தலைவா் பதவிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சித் தலைவா் பி.வெங்கடேசன் செயல்பட்டு வருகிறாா். இவா் மீது பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியதாகவும், ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் அரசு சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளாா். இவை நிரூபணமாவதால், தொடுகாடு ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் தொடா்ந்து தலைவராக செயல்பட்டால் அதிகார துஷ்பிரயோகம் செய்து நிதியிழப்பு ஏற்படுத்துவாா். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 -பிரிவு 205 (11)-இல் ஊராட்சிகளின் ஆய்வாளா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடுகாடு ஊராட்சித் தலைவா் வெங்கடேசனை, கடந்த 3-ஆம் தேதி முதல் அந்தப் பதவிலியிருந்து நீக்கம் செய்வதாக அவா் உத்தரவிட்டாா்.

ஏற்கெனவே இவா் தொடுகாடு ஊராட்சியில் 9 வாா்டு உறுப்பினா்கள் உள்ள நிலையில் 6 வாா்டு உறுப்பினா்கள் ஊராட்சித் தலைவருக்கு எதிராக ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏற்கெனவே தாமரைப்பாக்கம் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஊராட்சித் தலைவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது பாஜகவில் உள்ள தொடுகாடு ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com