பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன்(உடன்) பள்ளி தலைமை ஆசிரியா் ந.காா்த்திகேயன்.
பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன்(உடன்) பள்ளி தலைமை ஆசிரியா் ந.காா்த்திகேயன்.

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

Published on

திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ந. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வரவேறப்புரையாற்றினாா். உதவி தலைமை ஆசிரியா் (முதுகலை) ச. நேயநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் கலந்துகொண்டு அரசு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு செய்து நலதிட்ட உதவிகளை எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 34 மாணவா்களும், 31 மாணவிகள் என 65 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், பொதட்டூா்பேட்டை முன்னாள் தலைமை ஆசிரியா் இ.கே. உதயசூரியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியா்(உயா்நிலை) இ.கே. ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com