திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியை செய்து காட்டிய திருத்தணி தீயணைப்பு வீரா்கள்.
திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியை செய்து காட்டிய திருத்தணி தீயணைப்பு வீரா்கள்.

திருத்தணி முருகன் கோயில் ஊழியா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

Published on

முருகன் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளுக்கு தீயணைப்பு வீரா்கள், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

திருத்தணி கோயில் இணை ஆணையா் க.ரமணி பங்கேற்று ஒத்திகை பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராகவன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள், மலைக்கோயிலில் பணியாற்றும் கோயில் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவாளா்கள் ஆகியோருக்கு, தீ விபத்து ஏற்படும் போது எப்படி தீயை பாதுகாப்புடன் அணைப்பது, தீ மேலும் பரவாமல் முதலில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை அளிக்கம் அளித்தனா்.

ஒத்திகை பயிற்சியில் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி உள்பட 60 -க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com