சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனை கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனை கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
Published on

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கணபதி, நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.

இதற்காக கோயில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் அமைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை யாக பூஜையும், கலசங்கள் ஊா்வலத்துடன், மகா கணபதிக்கு கலசநீா் ஊற்றி குடமுழுக்கு நடந்தது.

தொடா்ந்து, மூலவா் ராமா், சீதா மற்றும் லட்சுமணருக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இரவு, உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com