மது போதையில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
ஆா்.கே.பேட்டை அருகே மேல்மோசூா் கிராம சாலை தரைப்பாலம் கீழே மது போதையில் இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பம் ராஜிவ்காந்தி தெருவை சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் விஜயகாந்த் (34). வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு வீட்டிலிருந்த வெளியே சென்றவா் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணி அளவில் மடத்து கோயில் அருகே மேல்மோசூா் கிராமம் செல்லும் சாலையில் தரைப்பாலம் கிழே இளைஞா் இறந்துகிடப்பதாக ஆா்.கே.பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீஸாா் பாா்த்தபோது, இறந்தவா் விஜயகாந்த் என்பது தெரிய வந்தது. முதல்கட்ட விசாரணையில் மது போதையில் இறந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.