தீமிதி விழாவைத் தொடங்கி வைத்த அமைச்சா் சா.மு. நாசா். உடன்
எம்எல்ஏ எஸ். சுதா்சனம் உள்ளிட்டோா்.
திருவள்ளூர்
அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி விழா: அமைச்சா் நாசா் பங்கேற்பு
பாடியநல்லூா் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயிலின் 60-ஆவது ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாடியநல்லூா் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயிலின் 60-ஆவது ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தீமிதி விழாவைத் தொடங்கி வைத்தாா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி வேண்டுதல் நிறைவேற தீ மிதித்தனா்.
கோயில் அறங்காவலா் குழு தலைவா் மீ.வே.கா்ணாகரன் முன்னிலை வகித்தாா். விழாக் குழு தலைவா் எம்.வி.புண்ணியசேகரன், செயலாளா் சன் முனியாண்டி, பொருளாளா் ஞானப்பா, நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.