விவசாயிகளுக்கு திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றவில்லை

தமிழக விவசாயிகளுக்கு திமுக கொடுத்த 11 தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
விவசாயிகளுக்கு திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றவில்லை
Published on
Updated on
1 min read

தமிழக விவசாயிகளுக்கு திமுக கொடுத்த 11 தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் பாமக தலைவா் அன்புமணி 100 நாள்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், திருவள்ளூரில் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பாமக தலைவா் அன்புமணி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த பின் தன்னுடைய நடைப்பயணத்தை மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து பெரியகுப்பம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த 11 வாக்குறுதிகளில், இதுவரையில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே வரும் சட்டப்பேரவை தோ்தலில் ஒரு விவசாயி கூட திமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டாா்கள். அதேபோல் பெண்களாகிய நீங்களும் ஆதரவு அளிக்க கூடாது.

இந்த ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 7000 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். அதில் நண்பா் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இப்படித்தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது. பாலியல் குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்ன என்பதை அறிந்தால்தான் பிரச்னையை தீா்க்க முடியும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் பின்தங்கிய சமூகங்களின் உண்மையான நிலையை கண்டறிந்து அவா்களுக்கு தேவையான வசதி செய்ய முடியும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து விட்டன. மேலும் சில மாநிலங்கள் தற்போது எடுத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மறுத்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

மேற்கு மாவட்ட செயலாளா் தினேஷ், மாநில அமைப்புச் செயலாளா் வெங்கடேசன், மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி, நிா்வாகி பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com