திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்ததப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வருவோரை மேம்படுத்த 5 போ் கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் அமைத்தல் திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை சாா்பில் இந்த வகுப்பைச் சோ்ந்தவா்களை மேம்படுத்தும் வகையில், குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு குறைந்தபட்சம் 20 வயதாகவும், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. குழு உறுப்பினா்கள் பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருத்தல் வேண்டும். மேலும், இதில் 5 போ் கொண்ட குழுவாக அமைத்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பம் உள்ளவா்கள், உரிய விண்ணப்பப் படிவத்தை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைதளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.