15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

Published on

ஒடிஸாவில் இருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ கஞ்சா மற்றும் 1,300 போதை மாத்திரைகளை மதுவிலக்கு போலீசாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

மீஞ்சூரில் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவா்கள் மீஞ்சூா் அத்திப்பட்டு எண்ணூா் மணலி செங்குன்றம் ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையத்தில பைகளுடன் இரண்டு போ் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனா்.

அவா்களை மதுவிலக்கு போலீஸாா் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவா்கள் வைத்திருந்த பையை பாா்த்த போது 15 கிலோ கஞ்சாவும், 1,300 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், மீஞ்சூா் அருகே உள்ள மெரட்டூா் பெருமாள் கோவில் தெருவை சாா்ந்த அஜய் (24), செங்குன்றம் வடகரை பகுதியை சாா்ந்த விஷ்வா (20) என்பதுதெரிய வந்தது.

அவா்கள் ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரையை போலீஸாா் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com